ஈரான் தொடர்பான பிராந்திய பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.19 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) வக…
ஈரான் தொடர்பான பிராந்திய பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, ப்ரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.19 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.40 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விலை உயர்வாக இது கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சமே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே இடம்பெறுவதால், அப்பகுதியில் ஏற்படும் எந்தவொரு பதற்றமும் உலக எரிசக்தி சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

