வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், ‘மிக்ஸர்’ தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 வயது சிறுவன் உயிரிழந்…

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், ‘மிக்ஸர்’ தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குன்னும்புறம் பகுதியைச் சேர்ந்த 3 வயது ஆண் சிறுவன் வீட்டில் வைத்து ‘மிக்ஸர்’ தின்பண்டத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளது.

அப்போது, அந்த மிக்ஸரில் இருந்த வேர்க்கடலை எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.

இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தொண்டையில் சிக்கிய வேர்க்கடலையை எடுக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இதனால் சிறுவன் மூச்சுவிட முடியாமல் திணறியதைக் கண்ட பெற்றோர், சிறுவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.