அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.ஈரானின் துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்துள்ள நிலையில், ஈரானின் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா இன்று புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.ஈரானின் துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்துள்ள நிலையில், ஈரானின் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா இன்று புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் மோதலின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஹோர்முஸ் நீரிணை அமெரிக்கப் படைகள் ஈரானின் கிரேட்டர் டுன்பு தீவில் உள்ள கடலோரப் பாதுகாப்பு அரண்கள் மற்றும் ஏவுகணைச் சேமிப்புக் கிடங்குகளை நோக்கிச் சுமார் 90 நிமிடங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.

இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளின் பிற முக்கிய எரிசக்தி ஏற்றுமதி வழித்தடங்களையும் மூடப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து உலகளவில் மசகு எண்ணெய் விலை ஒரு சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.உடனடி பேச்சுவார்த்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும், தவறினால் அடுத்த வாரம் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற முக்கிய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த மோதலினால் கடந்த சில நாட்களில் மட்டும் ஈரானின் தெற்குப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இராணுவ தளம் மீதான தாக்குதலில் 7 இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் தனது நட்பு நாடான ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி பாப் எல்-மண்டேப் கடல் வழித்தடத்தையும் மூடக்கூடும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுவதால், சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்து மற்றும் உலகப் பொருளாதாரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.