ஹொரண - மொரகஹஹேன வீதியில் உள்ள கானன்வில விகாரைக்கு அருகிலுள்ள வளைவில், இன்று (19) அதிகாலை மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதிவேகமாக வ…

ஹொரண - மொரகஹஹேன வீதியில் உள்ள கானன்வில விகாரைக்கு அருகிலுள்ள வளைவில், இன்று (19) அதிகாலை மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும், பின்னால் அமர்ந்திருந்தவரும் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 25 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் கிரிவத்துடுவவைச் சேர்ந்த 17 வயதுடைய உதீஷ சித்மின என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹொரண பிரதேசத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தைத் தொடர்ந்து டிப்பர் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் இன்று ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.