முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள், முழுமையான பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் திங்கட்கிழமை (20) நடைபெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர், மாலபே, தலஹேன, பரா…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள், முழுமையான பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில்  திங்கட்கிழமை (20)  நடைபெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர், மாலபே, தலஹேன, பராக்கிரம மாவத்தையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, கடந்த 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

இருப்பினும், பொலிஸ் ஒழுக்கக் கோவைகளின்படி, தற்கொலை செய்துகொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் பொலிஸ் மரியாதை   வழங்கப்படமாட்டாது என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த மரணம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.

சி. டி. விக்ரமரத்ன இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.