முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC), இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.2013ஆம் ஆண்டில் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, மு…
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC), இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.2013ஆம் ஆண்டில் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, முதலீட்டு சபயைில் ஒரு பணியை நிறைவேற்றுவதற்காக ஒரு தொழிலதிபரிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளின் கீழ்
இந்தக் குற்றச்சாட்டுகள், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

