கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று…

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (13) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, விளக்கமறியலில் உள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணையவழி தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.