அரசு நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அரசாங்கப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்…

அரசு நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

அரசாங்கப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில்,  ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான விசாரணையின் முன்னேற்றங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவுக்கு அமையவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.