கட்டுநாயக்க பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், கொழும்பு பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டியவைச் சேர்ந்த 41 வயதுடைய இந்த நபர், 2008 மு…

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், கொழும்பு பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலபிட்டியவைச் சேர்ந்த 41 வயதுடைய இந்த நபர், 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகர பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படும் வேளையில், சந்தேகநபரிடமிருந்து 31 கிராம் ஐஸ் (படிக மெத்தாம்பேட்டமைன்) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை (15) பொலிஸாரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் செல்லும் போது, பொலிஸ் அதிகாரியிடமிருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் சந்தேகநபர் திருடியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.