இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உயிரிழந்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரி…
இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உயிரிழந்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தனது புதல்வர் ஒருவரின் வழக்கு விவகாரம் தொடர்பான கவலை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாகவே சி.டி. விக்ரமரத்ன இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறிருக்கையில், உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் குறித்த அதிகாரி, தனது நாளாந்த நடவடிக்கைகளை சாதாரணமாகவே மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பிலான முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,

