முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபே பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று (17) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று காலை பதிவாகியுள்ளதுடன், அவர் அவசர சிகிச்சைக்காக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்ப…
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபே பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று (17) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று காலை பதிவாகியுள்ளதுடன், அவர் அவசர சிகிச்சைக்காக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழக்கும் போது அவருக்கு 63 வயதாகியது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இரண்டு பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் நிறைவடையும் வரை சம்பவத்தின் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச சென்று பார்வையிட்டதுடன், தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் விக்ரமரத்னவின் இல்லத்திற்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

