முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது இல்லத்திற்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும் சிசிரிவி காணொளிகளை மீட்டு விசாரணைகளை மேற்கொள்வது என்று ஒரு கருத்…

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது இல்லத்திற்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும் சிசிரிவி காணொளிகளை மீட்டு விசாரணைகளை மேற்கொள்வது என்று ஒரு கருத்து கூறப்படுகின்றது.அதில் எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கின்றது என்று தெரியவில்லை.ஏனென்றால் அவர் நாளாந்த வாழ்க்கை செயற்பாடுகளை சாதாரணமாகத் தான் ஆரம்பித்து இருக்கின்றார்.ஏன் இந்தத் தவறான முடிவை அவர் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்தார் என்கின்ற சந்தேகம் எழுகின்றது.வீட்டிலுள்ள சிசிரிவி காட்சிகளை மையப்படுத்தி பொலிஸார் விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலரின் வாக்குமூலத்தில் சந்தேகங்கள் எழுவதாகக் கூறப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.