தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.…
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.செப்டம்பர் 15ஆம் திகதி தாய்மாமன் தங்க மோதிரம்
ஒரு கிராம் தங்கத்தின் கொள்முதல் விலை ரூ.5,725 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஜூலை 14 முதல் ஓகஸ்ட் 17 வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வைத்தியசாலைகளில் பிறக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் பாரம்பரியத்தில் உள்ள 'தாய்மாமன் சீர்' மரபை பிரதிபலிக்கும் வகையில் அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
இந்தத் திட்டத்தின் பயன் 2026 ஜூன் 22 முதல் அரசு வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

