நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள மூடப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.இதனால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்ய முடியா…

நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள மூடப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.இதனால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்ய முடியாத நிலைசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள தேயிலை தோட்டத்திலும் , கெசல்கமு ஓயா பகுதியிலும் நோர்வூட் என்.சி தேயிலைத் தோட்டப் பிரிவிலும், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரையிலும் மீள மூடப்படவில்லை.குறித்த குழுவினர் தேயிலை மரங்களை வேரோடு பிடுங்கி, சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்தெடுத்து வருவதாகவும், இதனால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகமும் கூறுகின்றன.நேற்று (15) இரவு நோர்வூட் தோட்டத்திற்குச் சொந்தமான என்.சி தேயிலைப் பிரிவில், சிலர் தேயிலைச் செடிகளுக்கு அடியில் உள்ள மாணிக்கக்கல் அடங்கிய மண்ணைத் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் தோண்டப்பட்ட குழிகளால், தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

என்.சி தேயிலைத் தோட்டத்தில் பல குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நோர்வூட் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்த போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் காணப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குழிகளில் தேங்கும் மழைநீர்நோர்வூட் என்.சி தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் கெசல்கமு ஓயா அருகில் தொடர்ந்து இரவில் 200இற்கும் மேற்பட்டோர் மாணிக்ககல் அகழ்ந்தெடுத்து வருவதால் அப்பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி வருகிறது.இவற்நோடு அகழ்வு பணிகளின் பின்னர் குறித்த தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் முறையாக ஒழுங்குபடுத்தப்படாத அகழ்வுகள் மற்றும் மூடப்படாத குழிகள் பாரிய சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன எனவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். நிலத்தடி நீர் குறைதல், மண் அரிப்பு மற்றும் தேயிலை தோட்டத்தில் நடுப்பகுதிகளில் பாதுகாப்பற்ற குழிகளால் தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டவிரோதமாக அல்லது முறையாக மூடப்படாமல் திறந்த நிலையில் விடப்படும் குழிகளில் தேங்கும் மழைநீர், நுளம்புகள் பெருக வழிவகுத்து டெங்கு போன்ற நோய்களை உருவாக்குகிறது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.