புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) இன்று காலமானார். இந்த செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மூத்த பின்னணிப் பாடகி குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ். ஜானகி தனது குடும்பத்தினர…
புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) இன்று காலமானார்.
இந்த செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மூத்த பின்னணிப் பாடகி குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எஸ். ஜானகி தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக உயிர் பிரிந்தார் என்றும், இந்த துயரமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அப்சரா தனது பதிவில்,
என் அன்பு பாட்டியும், புகழ்பெற்ற பாடகியுமான எஸ். ஜானகி மறைந்த செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,
"அவர் தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக எங்களை விட்டுப் பிரிந்தார். எங்கள் இதயங்கள் கனத்திருந்தாலும், அவர் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கைக்கும், தனது காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு அளித்த மகிழ்ச்சிக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம்."
என்றும் தெரிவித்துள்ளார்.
உலக மக்களுக்கு மறக்க முடியாத குரலாக இருந்த ஜானகி, குடும்பத்தினருக்கு அன்பும், எளிமையும், கருணையும் நிறைந்த பாட்டியாக என்றும் நினைவில் வாழ்வார் என்றும் அவரது பேத்தி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அடையாளக் குரல்
தனது அறுபது ஆண்டு காலப் பயணத்தில், அவர் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஏறத்தாழ 48,000 பாடல்களைப் பதிவுசெய்து, பல தலைமுறை திரைப்பட நட்சத்திரங்களுக்கு ஓர் அடையாளக் குரலாகத் திகழ்ந்துள்ளார்.
இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுடனான தனது புகழ்பெற்ற கூட்டுப் பணிகளுக்காக அவர் அறியப்படுகிறார்.
அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

