மூதூர் சந்தையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -மூதூர் நிருபர்- மூதூர் சந்தையில் காணப்பட்ட மனித பாவனைக்கு உகந்ததல்லாத மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்ட…

மூதூர் சந்தையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

-மூதூர் நிருபர்-

மூதூர் சந்தையில் காணப்பட்ட மனித பாவனைக்கு உகந்ததல்லாத மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டு இன்று திங்கட்கிழமை காலை அழிக்கப்பட்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம்.ஹஸ்ஸாலி தெரிவித்தார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம்.ஹஸ்ஸாலி தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர் மூதூர் வாராந்த சந்தையினை நேற்று சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது மனித பாவனைக்கு உகந்ததல்லாத 500 கிலோ நிறை கொண்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டதோடு, காலாவதியான நூடுல்ஸ் பொதியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.