நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு திணைக்களம் இன்று(08.07.2026) வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடும் வெப்பம் நிலவும் வாய்ப்பு இதன்படி, நாளை (09.07.2…

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு திணைக்களம் இன்று(08.07.2026) வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் நிலவும் வாய்ப்பு இதன்படி, நாளை (09.07.2026) முதல் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் கடும் வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.