மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரின் மனைவி லிமினி ராஜபக்ச இருவரும் கடந்த வாரம் திடீர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் கடந்த வார ஆரம்பத்தில் முதன்முதலாக மாலைதீவை சென்றடைந்துள்ளனர். அது சாதாரண ஒரு விஜயம் அல்ல,…
மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரின் மனைவி லிமினி ராஜபக்ச இருவரும் கடந்த வாரம் திடீர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் கடந்த வார ஆரம்பத்தில் முதன்முதலாக மாலைதீவை சென்றடைந்துள்ளனர். அது சாதாரண ஒரு விஜயம் அல்ல, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹின் மகளின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகவே சென்றுள்ளனர்.மாலைதீவில் நடந்த திருமண நிகழ்வு மாலைதீவில் அமைந்துள்ள மிக ஆடம்பரமான உள்ளாச விடுதியில் (Resort) ஒன்றில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான திருமண விழாவில் இலங்கையிலிருந்து விசேட விருந்தினர்களாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்திருந்தது.
ஆனாலும், இந்த விஜயம் அத்துடன் முடிவடையவில்லை. மாலைத்தீவு திருமண நிகழ்வு முடிந்த உடன், நாமல் ராஜபக்ச அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான கிழக்காசிய மாநாட்டில் (Global Economic Cooperation East Summit) உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் அங்கு விசேட உரை ஒன்றையும் ஆற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

