ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்ட சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் வழக்கினை, கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (07) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்ட சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் வழக்கினை, கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (07) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவர்ணதுங்க, இவ்வழக்கை நவம்பர் 16 ஆம் திகதி ட்ரயல் அட்பார் முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தார். அத்துடன், வெளிநாட்டு சாட்சிகளை அழைப்பது தொடர்பான நீதிச் சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக, இந்தியாவைச் சேர்ந்த இரண்டு சாட்சிகளுக்கும் அழைப்பாணை (Summons) அனுப்புமாறு உத்தரவிட்டார்.
கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறையற்ற வகையில் கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சட்டமா அதிபரால் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

