இந்தியா ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் முழு நாட்டையுமே நிலைகுலைய வைத்துள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நாட…
இந்தியா ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் முழு நாட்டையுமே நிலைகுலைய வைத்துள்ளது.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, நான்கு பேரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்,
கடந்த ஜூன் 18-ஆம் திகதி, வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறிய சிறுமியை, ஓட்டுநர் கடத்திச் சென்று ஹோட்டல் ஒன்றில் விற்றுள்ளார்.
5 நாட்களாக நான்கு வெவ்வேறு ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டு, கட்டாயப்படுத்தி மதுபானம் புகட்டப்பட்டு, 32 நபர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். ஜூன் 22-ஆம் திகதி பொலிஸாரினால் மீட்கப்பட்ட சிறுமி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
சிறுமிக்கு நேர்ந்த இக்கொடூரத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் அவர்களில் நான்கு பேரை அடித்துக் கொன்றனர்.
மீதமுள்ள 18 பேரைக் கயிறுகளால் கட்டி, பொதுமக்களும் பொலிஸாரும் பிரதான சாலையில் வைத்து அடித்தனர்.
இருப்பினும், இவ்வாறான வன்முறைச் செயல்கள் சட்டப்படி குற்றமாகும் என்பதையும், நீதித்துறைக்கு அப்பாற்பட்டு சட்டத்தைத் தனிநபர்கள் கையில் எடுப்பது விசாரணையைப் பாதிக்கும் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

