நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு, சிறை வளாகத்தில் மோதல் நடந்த இடங்கள், சேதம் ஏற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைதிகளிடம் கு…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு, சிறை வளாகத்தில் மோதல் நடந்த இடங்கள், சேதம் ஏற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைதிகளிடம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெறத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள்
மோதல் இடம்பெற்ற போது அன்று பணியில் இருந்த சிறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.
இதனையடுத்து நீர்கொழும்பு சிறைக்கு வெளியே இருந்த மக்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.
கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் கைதிகளும், சிறை அதிகாரிகளும் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 8 சிறை அதிகாரிகளும் அடங்கியுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த சிறை அதிகாரிகளின் பிரேத பரிசோதனையில், அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின்படி, தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேருக்கு, ஐந்து பேர் கொண்ட தடயவியல் குழு பிரேதப் பரிசோதனை நடத்தியது.
அதன்படி, 14 மரணங்கள் துப்பாக்கிச்சூட்டாலும், மேலும் 9 மரணங்கள் தாக்குதல்களாலும் ஏற்பட்டதாக பிரேதப் பரிசோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.மற்றொரு குழுவினர் தொடர்ந்தும் சிகிச்சை
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு குழுவினர், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையின் பிரதான ஜன்னலிலிருந்து கைதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சிறை அதிகாரி குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
குறித்த அதிகாரிக்கு தற்போது சில கைதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவருடன் பணியாற்றும் சக அதிகாரிகள் அவருடன் இருப்பதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் நடந்த நேரத்தில், அவர் நீர்கொழும்பு சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறையில் சேர்ந்துள்ளதுடன், பல சிறைகளிலும் பணியாற்றியுள்ளார்.
சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுடன் இணக்கமாக பழகும் அதிகாரியாக அவர் கருதப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

