தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் நாட்டை முறையாக ஆட்சி செய்ய முடியாவிட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஊ…

தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் நாட்டை முறையாக ஆட்சி செய்ய முடியாவிட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், கோட்டாபய ராஜபக்ஷவை போன்று நாட்டை ஆளக்கூடிய திறமையான மனிதர்கள் இந்நாட்டில் இருந்தனர் என்பதை வலியுறுத்தினார்.

மேலும், இந்த அரசாங்கத்தாலோ அல்லது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவாலோ நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாவிட்டால், குறைந்தபட்சம் கோட்டாபய ராஜபக்ஷவிடமாவது ஆலோசனைகளைப் பெற்று நாட்டை வழிநடத்த வேண்டும் என்றும் அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.