நாட்டில் சட்டத்தின் ஆட்சி தற்போது பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (08) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியைப் பேணுவதில் ஏற்பட்…
நாட்டில் சட்டத்தின் ஆட்சி தற்போது பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (08) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, அண்மையில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வெலிக்கடை, மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் சிறைச்சாலை நிர்வாகத்தில் காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் கைதிகள் நெருக்கடி, செல்வாக்கு மிக்க கைதிகளின் ஆதிக்கம் மற்றும் ஊழல் போன்ற விடயங்கள் உடனடியாக சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சில சிறைச்சாலைகளில் முஸ்லிம் கைதிகளுக்கான தொழுகை அறைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மஹர சிறைச்சாலையில் இருந்த பள்ளிவாசல் அகற்றப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், அந்த மத வழிபாட்டு வசதிகள் மீள வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், சிறைச்சாலை அமைப்பு மற்றும் குற்றவியல் நீதி முறைமை முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக புனர்வாழ்வு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

