இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மொத்தமாக 68,071 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோய்த்தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப…
இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை மொத்தமாக 68,071 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோய்த்தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு பரவல் அதிகரித்த மாதமாக ஜூன் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாதத்தில் மட்டும் 21,538 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஜூலை மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் 12,692 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை, நோயின் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
மாகாண வாரியாகப் பார்க்கையில், அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு மட்டும் 35,823 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தெற்கு மாகாணத்தில் 10,657 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,756 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,560 பேரும் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

