இலங்கையில் இன்று (12) பதிவான அதிகபட்ச வெப்பநிலை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, பொத்துவிலில் 38.0 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை, அப்பகுதியில் அமைந்துள்ள வளிமண்டலவியல் திணைக்களத்…

இலங்கையில் இன்று (12) பதிவான அதிகபட்ச வெப்பநிலை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, பொத்துவிலில் 38.0 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை, அப்பகுதியில் அமைந்துள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் தானியங்கி வானிலை கண்காணிப்பு நிலையத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இன்றைய தினத்தில் நாட்டின் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக பொலன்னறுவை பகுதியில் 37.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் அமைந்துள்ள வானிலை கண்காணிப்பு நிலையங்களில் இன்று மதிய வேளையில் பதிவான உச்ச வெப்பநிலைகளின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்ப்பதுடன், போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடல்நலத்தைப் பேணுமாறும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.