இலங்கையை நிலையான அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றிச் செல்ல வேண்டுமெனில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் அரசியல் பிரதிநிதிகள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந…

இலங்கையை நிலையான அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றிச் செல்ல வேண்டுமெனில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியின் அரசியல் பிரதிநிதிகள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வரும் நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன நல்லிணக்கம் அடிப்படைத் தேவையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நல்லிணக்கம் நிலவாத சூழலில் எந்த நாடும் நீடித்த வளர்ச்சியை எட்ட முடியாது என்றார்.

மேலும், நாட்டில் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகள் அனைத்தையும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்களின் மூலம் தீர்த்துக்கொண்டு, அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார்.