தற்போது 17 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற…

தற்போது 17 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இன்று (08) நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய மாற்று வருவாயாக நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் உள்ளவர்கள் வழங்கும் இந்த தனித்துவமான பங்களிப்பை பாராட்டுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.