ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தாய்வான் நாட்டு இளைஞர், யுவதிகள், இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உள்ளூர் மக்களுக்கு வலியுறுத்தும் நோக்கில் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்பகுதியாக, சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ப…

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தாய்வான் நாட்டு இளைஞர், யுவதிகள், இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உள்ளூர் மக்களுக்கு வலியுறுத்தும் நோக்கில் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்பகுதியாக, சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளை அகற்றும் தொண்டுப் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்கும் இந்த இயற்கை நேயச் சிரமதானப் பணி, மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. (YMCA) சமூக சேவை அமைப்புடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்படி, மட்டக்களப்பு நகர வாவிக்கரையோரப் பகுதிகளில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றும் சிரமதான விழிப்புணர்வு நடவடிக்கை திங்கள்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டு, தற்போதும் நடைபெற்று வருகின்றது. தாய்வான் நாட்டு இளைஞர், யுவதிகளுடன் இணைந்து, மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. அமைப்பின் தன்னார்வலர்களும் இந்தப் பணியில் உற்சாகத்துடன் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.