தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில், 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.தற்கொலைக்கான கா…

தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,  25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.தற்கொலைக்கான காரணம்சம்பவத்தன்று இரவு, தனது தாயின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அதிகாலை 2:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளில், அவர் வீதிகளில் ஆடையின்றி ஓடுவதும், ஒரு கோவிலில் சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. இறுதியில், அதிகாலை 3:00 மணியளவில் குளத்திற்குள் அவர் குதிப்பது தெரியவந்துள்ளது. மறுநாள் காலையில், தாய் கதவை உடைத்து வெளியே வந்து தேடியபோது, தேஜஸ்வினியின் உடல் குளத்தில் மிதப்பது கண்டெடுக்கப்பட்டது.

அவர் கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தூக்கத்தில் ஏற்படும் பயங்கர கனவுகள் மற்றும் பீதி தாக்குதல்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகத் தாயின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் மனநல பாதிப்பாகவே இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.