நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ காலப்பகுதியில் சினிமா பாடல்கள், ஆடல், பாடல்கள் உள்ளிட்ட ஐந்து கலாசாரத்துக்கு முரணான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ காலப்பகுதியில் சினிமா பாடல்கள், ஆடல், பாடல்கள் உள்ளிட்ட ஐந்து கலாசாரத்துக்கு முரணான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள மகோற்சவத்தை முன்னிட்டு இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பக்தர்களின் ஆன்மீக சூழலை பாதுகாக்கும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருவிழா காலத்தில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளை பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

