பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோத…
பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கில் இடம்பெற்றுள்ள இரண்டு இந்திய தேசிய சாட்சிகளுக்கு வெளிநாட்டு சாட்சிகளுக்கான நடைமுறைக்கு அமைய அழைப்பாணை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சாட்சிகளின் முன்னிலையை உறுதிப்படுத்தும் வகையில் வழக்கை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

