போக்குவரத்து அபராதங்களை இணையவழியில் செலுத்துமாறு அறிவுறுத்தும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகள் குறித்து பொலிஸ் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரில் அனுப்பப்படுவதாகத் தோன்றும் இந்தச் செய்திகள், போக்குவரத்து வித…
போக்குவரத்து அபராதங்களை இணையவழியில் செலுத்துமாறு அறிவுறுத்தும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகள் குறித்து பொலிஸ் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரில் அனுப்பப்படுவதாகத் தோன்றும் இந்தச் செய்திகள், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு தெரிவித்து, சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளையும் இணைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.திணைக்களம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை
எனினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இவ்வாறான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளரான பிரதி பொலிஸ் பிரிவின் தலைவர் டபிள்யூ.பி.ஜே. செனதீரா தெரிவித்துள்ளார்.
இந்த போலி இணைப்புகளைத் திறக்கவோ, தனிப்பட்ட அல்லது வங்கி தொடர்பான தகவல்களை வழங்கவோ, அந்தச் செய்திகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான மோசடிகளால் பாதிக்கப்படுவோர் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

