நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை என அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "நீதி அமைச்சருக்கு எதிராகத் தாக்கல் செய்…

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை என அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"நீதி அமைச்சருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாங்கள் இதுவரை கையொப்பமிடவில்லை. அந்தப் பிரேரணை தொடர்பாக நாம் இன்னும் எவ்விதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை. சுயாதீனமாக முடிவெடுக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் நாம் அங்கம் வகித்தாலும், சுயாதீனமாக முடிவெடுக்கும் உரிமை எமக்கு உண்டு. அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் எங்களிடம் உள்ளது. எது எவ்வாறாக இருப்பினும், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் அரசு பொறுப்பேற்று, அதற்கு முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்." என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.