பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க…
பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது அமைச்சர் வசந்த சமரசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பப்பாளி பழங்களில் இதுபோன்றவற்றிற்கு நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் ஒரு பெரும் பிரச்சினையாகிவிட்டது என்று அமைச்சர் கூறியுள்ளார். அத்தகைய நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் சோதனை நடத்துவதே அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னரும் வர்த்தகர்கள் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தினால், இது தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

