கந்தளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், மனித பாவனைக்கு உதவாத நச்சுத்தன்மை வாய்ந்த விதைகளை உட்கொண்டதன் காரணமாக, 6-ஆம் தரத்தில் பயிலும் 22 மாணவர்கள் வாந்தியெடுத்து சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக…
கந்தளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், மனித பாவனைக்கு உதவாத நச்சுத்தன்மை வாய்ந்த விதைகளை உட்கொண்டதன் காரணமாக, 6-ஆம் தரத்தில் பயிலும் 22 மாணவர்கள் வாந்தியெடுத்து சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனைய 17 மாணவர்கள் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் துர்ணி சமன், பாதிக்கப்பட்ட மாணவர்களில் 20 பேர் சிறுவர்களும், 2 பேர் சிறுமிகளும் எனத் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணைகளில், மாணவர்களில் ஒருவர் இந்த விதைகளை வீட்டிலிருந்து பாடசாலைக்குக் கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனை உட்கொண்டதன் பின்னரே ஏனைய மாணவர்களும் சுகயீனமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, குறித்த விதைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அவை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

