இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்த உள்நாட்டு மீன்பிடி படகு ஒன்றின் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பொத்துவில் கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகு தொடர்பாக கொழ…
இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்த உள்நாட்டு மீன்பிடி படகு ஒன்றின் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பொத்துவில் கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகு தொடர்பாக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் வழங்கப்பட்ட அவசர அறிவித்தலுக்கு அமைய இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.விசேட தேடுதல் நடவடிக்கை
இதன்போது நிலவிய மிகவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும், 2026 ஜூலை 17 ஆம் திகதி இலங்கை கடற்படையின் 'விஜயபாகு' கப்பல் மற்றும் மேலதிக கடற்படைப் படகுகளைப் பயன்படுத்தி அந்த கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் போதே, பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்த மீனவர் அவரது மீன்பிடி படகில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.இவ்வாறு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மீனவருக்கு, இலங்கை கடற்படைக் கப்பலான 'விஜயபாகு' மூலம் உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அவர் மிக விரைவாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

