நெல்லின் விலை வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டு, உதவியற்ற நிலையில் உள்ள விவசாயிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி விசேட வேலை திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. நெல் விலையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியால் நாட்டின் பல பாகங்களிலும் உதவியற்ற நிலையில் உள்ள விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக குறித்த தீர்…
நெல்லின் விலை வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டு, உதவியற்ற நிலையில் உள்ள விவசாயிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி விசேட வேலை திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
நெல் விலையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியால் நாட்டின் பல பாகங்களிலும் உதவியற்ற நிலையில் உள்ள விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெல் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி
நாட்டில் நெல் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து விவாதித்த கட்சியின் உறுப்பினர்கள், நெல்லுக்கு நியாயமான விலை வழங்கத் தவறிய அரசாங்கத்தின் மீது கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், விவசாயிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் உயர் பதவியில் உள்ள அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில், விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு திட்டமாக, நாடு முழுவதும் விவசாயிகளால் ஏற்கனவே தொடங்கப்பட்ட போராட்ட இயக்கங்களுக்குத் தனது கட்சியின் முழு ஆதரவையும் வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
மேலும், நெல்லுக்கு உத்தரவாதமான விலையை வழங்குமாறு அரசை வலியுறுத்தி, நாடுதழுவிய போராட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளையும் அந்தக் கட்சி எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

