தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹின்கெந்த தனது பதவியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவ்வாறு பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னரு…
தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹின்கெந்த தனது பதவியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவ்வாறு பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் ரொபர்ட் ஹின்கெந்த தனது மேயர் பதவி விலகுவதாக அறிவித்திருந்த போதிலும், பின்னர் அவர் அந்த முடிவை மாற்றிக்கொண்டதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன.[DCXD8N ] எனினும், அவர் இன்று (15) உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி கட்சி தரப்பில் இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களும் இது குறித்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

