நீர்கொழும்பு மாநகரசபையின் மேயர், சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த, தனது மேயர் பதவியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை (15) மாலை அறிவித்தார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், அவர் மேயராக பதவியேற்றிருந்தார். தமது தீர்மானம் முற்றிலும் ஒரு தனிப்பட்ட முடிவு என்று குறிப்பிட்ட ஹின்க…
நீர்கொழும்பு மாநகரசபையின் மேயர், சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த, தனது மேயர் பதவியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை (15) மாலை அறிவித்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், அவர் மேயராக பதவியேற்றிருந்தார்.
தமது தீர்மானம் முற்றிலும் ஒரு தனிப்பட்ட முடிவு என்று குறிப்பிட்ட ஹின்கெந்த, “தேசிய மக்கள் சக்தியின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பினால் நான் எவ்வாறு நீர்கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு நியமிக்கப்பட்டேனோ, அதேபோல எதிர்காலத்தில் புதிய மேயரொருவர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவார்” என்றும் தெரிவித்துள்ளார்.

