நீர்கொழும்பு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நீர்கொழும்பு நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் பாரியளவிலான அச்சுறுத்தல் நிலையொன்று ஏற்படக்கூடும் என்றும்…
நீர்கொழும்பு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் பாரியளவிலான அச்சுறுத்தல் நிலையொன்று ஏற்படக்கூடும் என்றும் புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்தந்த தினங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளுடன் தொடர்புடைய நபர்களை மட்டும் நீதிமன்ற வளாகத்தினுள் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீதிமன்றத்திற்குள் வெடிக்கவுள்ள கலவரம் நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று விசாரணைக்குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சேகரித்த புலனாய்வுத் தகவல்களின் போதே நீர்கொழும்பு நீதிமன்றத்திலும் அவ்வாறான தாக்குதல் மற்றும் கலவரம் ஏற்படக் கூடிய அபாயம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் நேரடியாக நீதிமன்றத்திற்கு வருகை தந்து மாஜிஸ்திரேட் நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அறிக்கையொன்றின் ஊடாக இந்த தகவல்களை தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றத் தொகுதியின் அனைத்து நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உடனடியாக மாஜிஸ்திரேட் அறைக்கு அழைக்கப்பட்டு, குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்தப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

