நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து மற்றும் ஆறாம் திகதிகளில் நடந்த கலவரத்தில் சிறை அதிகாரிகள் உட்பட கைதிகள் பலர் பலியாகியிருந்தனர். இந்நிலையில், மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார முன்னிலையில் சிறைச்ச…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து மற்றும் ஆறாம் திகதிகளில் நடந்த கலவரத்தில் சிறை அதிகாரிகள் உட்பட கைதிகள் பலர் பலியாகியிருந்தனர். இந்நிலையில், மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் கண்ணீர் சிந்தி தருணம் பதவாகியிருந்தமையும் மிக மனவருத்தத்தை அளிக்கும் வகையில் இருந்தது. உயிரிழந்த அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்ற அமைச்சரிடம் தங்களது குறைகளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும் எனவும் முறையான உத்தரவு கிடைக்காததன் காரணமாகவே இது இவ்வளவு பெரிய அழிவாக மாறியது எனவும் அவர்கள் வலியுருத்தியுள்ளனர். இவ்விடயம் சம்பவம் தொடர்பில் மேலிடத்தில் இருந்து உரிய நேரத்தில் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்புகின்றது. இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,