நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இருந்த இளம் பெண் தொடர்பான பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. குறித்த இளம் பெண், பதுளை மா…
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இருந்த இளம் பெண் தொடர்பான பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார். இருப்பினும் அவர் சிறைக்கு சென்றதற்கான காரணம் தொடர்பில் பலர் சில பின்னணிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

