நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று(7) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வைத்தியசாலையின…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று(7) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
வைத்தியசாலையின் 72 மற்றும் 79 ஆம் இலக்க விடுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றுக்குச் சென்ற அமைச்சர், அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.நீர்கொழும்பு சிறை அத்துடன், காயமடைந்தவர்களுக்கான தற்போதைய சிகிச்சைகள், அவசர தேவைகள் மற்றும் இதர ஆதரவு சேவைகள் குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டார்.
சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த 29 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 15 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்பதுடன், ஏனைய 14 பேர் கைதிகள் ஆவர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 12 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

