நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது கைதிகள் ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன், இரும்புக் கேட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததாக நீதியமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றிய அவர், இந்தச் சம்பவத்த…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது கைதிகள் ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன், இரும்புக் கேட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததாக நீதியமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றிய அவர், இந்தச் சம்பவத்தை அரசாங்கம் எந்தவொரு வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும், சிறைச்சாலை நிர்வாகத்தை சீர்குலைப்பதே தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஆயுதமற்ற இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவித்த அமைச்சர், அவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற ஏனைய அதிகாரிகள் செங்கற்கள் மற்றும் கம்புகளால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.