நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி இடமாற்றப்பட்ட நிலையில், அவர் இடமாற்றப்பட்ட சிறைச்சாலையின் பெயரை வெளியிட்டமைக்கு சிறை அதிகாரிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.கலவரத்தின் போது, சிறைச்சாலைக் கதவின் சிறிய இடைவெளியின் வழியாக து…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி  இடமாற்றப்பட்ட நிலையில், அவர் இடமாற்றப்பட்ட சிறைச்சாலையின் பெயரை வெளியிட்டமைக்கு சிறை அதிகாரிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.கலவரத்தின் போது,  சிறைச்சாலைக் கதவின் சிறிய இடைவெளியின் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி இடமாற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. பாதுகாப்பை அதிகரிக்கவும்..சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டதாக தெரிவித்து,  குறித்த அதிகாரி இடமாற்றப்பட்ட சிறைச்சாலை தொடர்பான விபரங்கள் செய்திகளாக வெளியாகியிருந்தன. இந்த நிலையில்,  குறித்த தகவல்கள் வெளியானமைக்கு தாம் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக சிறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நிகழவிருந்த ஒரு பேரழிவைத் தடுப்பதற்காக, தனது உயிரைப் பணயம் வைத்து நீர்கொழும்பு சிறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய, தமது சக பொலிஸ் அதிகாரிக்கு தற்போது மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக குறித்த அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரியின் பாதுகாப்பை தற்போது இருப்பதை விடவும் அதிகரிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.