சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படவே நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் த…

சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படவே நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் இனக்கலவரங்கள் சிறைச்சாலைச் சம்பவங்களின் மூலமே தொடங்கப்பட்டது.

இது போன்ற குழப்பங்கள் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் சித்தரிக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வரப்பயன்படுத்தப்படலாம்.

விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வாறான குழப்பங்களைச் செயற்கையாக உருவாக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிள்ளையான் கைது செய்யபடலாம் என்றும் குறிப்பிட்டார்.

அவருக்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைக்க பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக பிள்ளையான் கைது செய்யப்படுவார் என குறிப்பிட்டார்.

கருணாவை பொறுத்தவரை, அத்தகைய நேரடி ஆதாரங்களோ அல்லது அண்மைய விசாரணைகளில் மையப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளோ அவர் மீது வலுவாக இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க ....