நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 600 க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பு சிறைச்சாலையில…

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 600 க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.மோதல் சம்பவம் அதேநேரம், இந்த மோதல் சம்பவம் குறித்து தனியானதொரு விசாரணையை முன்னெடுப்பதற்காகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த மோதலின் போது உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் உடனடியாகப் பதவியுயர்வு மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றை மையமாகக் கொண்டு கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட மொத்தம் 29 பேர் இந்த மோதலில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.