நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.இறுதி மரியாதைகடந்த 6 ஆம் திகதி காலை நீர்…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.இறுதி மரியாதைகடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்தனர்.

சிறைக்கைதிகளின்  தாக்குதல்களுக்கு இலக்காகியே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியமை குறிப்பிடதக்கது.