போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளை திசைத்திருப்புவதற்காக நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (…

போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளை திசைத்திருப்புவதற்காக நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து சில சந்தேகங்கள் நிலவுகின்றது. விரிவான விசாரணைகளின் பின்னர் உண்மை வெளிப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

போதைப் பொருளுக்கு எதிராக அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இதில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் சிக்கியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் செயற்படுகின்றன. இதன் ஒரு அங்கமாகவே சிறைச்சாலை குழுக்கள் நீர்கொழும்பில் செயற்பட்டுள்ளது.குற்றவாளிகளாகியுள்ள பழைய அரசியல்வாதிகள்

சிறைச்சாலையில் இரவில் வன்முறை இடம்பெறவில்லை. அப்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது பகலிலேயே நடந்துள்ளது.இதனால் இந்த சம்பவத்தில் ஏதாவது சூழ்ச்சி நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியில் குற்றவாளிகளாகியுள்ள பழைய அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒரு அங்கமாக சிறைச்சாலை குழுவினால் இது திட்டமிடப்பட்டதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.