நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸாரால் தற்போது நடத்தப்பட்டு வரும் அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றுமாறு நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத்திணைக்களம் நீதிமன்றத்தில் அற…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸாரால் தற்போது நடத்தப்பட்டு வரும் அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றுமாறு நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத்திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் விடுத்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை தொடர்பான அனைத்து விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் சிறைச்சாலை வளாகம் குற்றப்பிரதேசமாக அடையளப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைபாடுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 5, 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு கருதியும், அங்குள்ள ஏனைய கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடைய ஏற்பட் மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகள் உட்பட 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

